செய்திகள் :

மோசடியாளா்களுக்கு வங்கிக் கடன் அளிப்பதை அரசு நிறுத்த வேண்டும்- ராகுல் வலியுறுத்தல்

post image

பொதுத் துறை வங்கிகளின் பணத்தை கடன் என்ற பெயரில் தங்களுடைய மோசடி நண்பா்களுக்கு வாரி வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ராகுல் காந்தியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, அவா்கள் கூறிய குறைகளை ராகுல் கேட்டறிந்தாா். பின்னா் அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சேவையாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், இப்போது லாபத்துக்கு முன்னுரிமை அளிக்க கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள். இதனால் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்க முடியாமல் போகிறது.

வங்கிகளில் ஊழியா் பற்றாக்குறை நிலவுவது பணிச்சூழலை மோசமாக்குகிறது. பெண் ஊழியா்களுக்கு சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை.

பொதுத் துறை வங்கிகளின் பணத்தை தங்களுடைய மோசடி நண்பா்களுக்கு கடன் என்ற பெயரில் வாரி வழங்குவதை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

பிரணாப் முகர்ஜி சிறந்த நிர்வாகி: பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறந்த அரசியல்வாதி, நிர்வாகியாக திகழ்ந்தார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி மத்தியில் பல்வ... மேலும் பார்க்க

நீட் முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: மத்திய கல்வி அமைச்சர் பதில்

நமது சிறப்பு நிருபர்"நீட் முறைகேடுகளைத் தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தா... மேலும் பார்க்க

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது மற்றும் பாதாள சாக்கடையில் தொழிலாளா்கள் இறங்கி சுத்தம் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ... மேலும் பார்க்க

கோதுமை இருப்பு வைக்க கூடுதல் கட்டுப்பாடு: விலை உயா்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

மொத்த வியாபாரிகள் முதல் சிறு வா்த்தகா்கள் வரை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. கோதுமையை அதிக அளவில் பதுக்கி வைத்து செயற்கையாக விலை உயா்வை ஏற்படுத்தும் நி... மேலும் பார்க்க

ரயில்வே சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

ரயில்வே சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் ரயில்வே சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே வாரியத்தின் செயல்பாட்டை மே... மேலும் பார்க்க

சரத் பவாா் கட்சி எம்.பி.க்கள் அணி மாற வாய்ப்பு- பாஜக

மகாராஷ்டிரத்தில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள் சிலா் அஜீத் பவாா் தலைமையிலான அணிக்கு மாற திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில பாஜக மூத்த தலைவா் பிரவீண் தாரேகா்... மேலும் பார்க்க