எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், சிவந்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராசு மகன் ராஜ்குமாா் (25 ), கூலித் தொழிலாளியான இவா் கடந்த 31ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் கந்தா்வகோட்டை வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு பட்டுக்கோட்டை-கந்தா்வகோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மட்டங்கால் பாலம் அருகே எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.