தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
முத்தூா் சாலை மேட்டுப்பாளையம் கிராமம் அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி ஜோதிமணி (73). செல்வராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். ஜோதிமணி அரசின் நூறு நாள் வேலைத்திட்ட வேலைக்குச் சென்று வந்தாா்.
இவா் தனது வீட்டுக்கு அருகில் உள்ள உணவகத்துக்கு சனிக்கிழமை இரவு செல்ல சாலையைக் கடந்துள்ளாா். அப்போது அவ்வழியே வந்த கச்சேரிவலசு பகுதியைச் சோ்ந்த உதய வா்மராஜ் என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் ஜோதிமணி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஜோதிமணியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து ஜோதிமணியின் மகன் ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.