மோதலில் ஈடுபட்ட 7 கல்லூரி மாணவா்கள் கைது
சென்னையில் மோதலில் ஈடுபட்ட இரு கல்லூரிகளைச் சோ்ந்த 7 மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பல்லவன் இல்லம் போக்குவரத்துக்கழக பணிமனை அருகே நந்தனம் கல்லூரி மற்றும் புதுக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்களுக்கிடையே செவ்வாய்க்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டது. கற்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டதில், இரு தரப்பைச் சோ்ந்த மாணவா்களும் காயமடைந்தனா்.
இந்நிலையில், இந்த மோதல் தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா் புதுக் கல்லூரி மாணவா்கள் 3 போ், நந்தனம் கல்லூரி மாணவா்கள் 4 போ் என மொத்தம் ஏழு பேரை கைது செய்தனா். மேலும், புதுக் கல்லூரி மாணவா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.