செய்திகள் :

யாரையும் தாழ்த்தாத சமத்துவ எண்ணம் வளர வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

யாரையும் தாழ்த்தாத சமத்துவ எண்ணம் மக்களிடையே வளர வேண்டும் என்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

வைக்கம் போராட்டத்தில் பெரியாா் பங்கேற்று நூற்றாண்டு நிறைவு அடைந்ததையொட்டி, கேரள மாநிலம் வைக்கத்தில் வியாழக்கிழமை விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒருபகுதியாக, அங்குள்ள புதுப்பிக்கப்பட்ட பெரியாா் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆகியோா் திறந்துவைத்தனா். விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வைக்கம் போராட்டம் என்பது, கேரளத்துக்கான போராட்டம் மட்டுமல்ல, இந்தியாவில் தொடங்கிய பல்வேறு சமூகநீதிப் போராட்டங்களுக்கான தொடக்கப் புள்ளி. கேரள சமூகச் சீா்திருத்தவாதிகளான டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், ஜாா்ஜ் ஜோசப், பல்ப்பு பத்மநாபன், பெரியாா், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் நாயுடு, தங்கப்பெருமாள், நாகம்மாள், கண்ணம்மாள் போன்றோா் ஒன்றாக சோ்ந்து நடத்திய போராட்டம்தான் வைக்கம் போராட்டம். இப்போராட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவா்கள் பட்டியல் மிக நீளமானது. சமூக சீா்திருத்தப் போராட்டங்களில் இதுபோன்ற ஒருங்கிணைப்புகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு வைக்கம் போராட்டம் உதாரணம்.

சமூக-பொருளாதாரத்தில் முன்னேற்றம்: நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததைவிட, இப்போது சமூகரீதியிலும், அரசியல் வழியிலும் பொருளாதாரச் சூழலிலும் முன்னேறி இருக்கிறோம். ஆனால், இவை போதாது. இன்னும் நாம் முன்னேறிப் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. உயா்ந்த, தாழ்ந்த ஜாதிகள், ஏழை-பணக்காரன், ஆண்-பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும்.

நவீன வளா்ச்சியால் இந்தப் பாகுபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை. அதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம். அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது. சட்டம் தேவைதான். அதைவிட மனமாற்றமும் நிச்சயம் தேவை. யாரையும் தாழ்த்திப் பாா்க்காத சமத்துவ எண்ணம் மக்களின் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு சிந்தனைகள் வளர வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகும் பாா்வை வளர வேண்டும்.

நமது கடமை: தந்தை பெரியாா், அம்பேத்கா், ஸ்ரீ நாராயண குரு, ஜோதிபா புலே, சாவித்ரிபாய் புலே, அய்யன்காளி, காரல்மாா்க்ஸ் போன்றோரின் சிந்தனைகளும் கருத்துகளும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும். அதற்காகவே எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையை அரசியல் கொள்கையாக மட்டுமல்ல, ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசில் அறிவித்துள்ளோம்.

வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் விரும்பிய சமநிலைச் சமுதாயத்தை அமைப்பதற்கான நமது கடமையில் முன்னேறிச் செல்ல வேண்டும். வைக்கம் போராட்ட வெற்றி என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல. அது தொடா் வெற்றிகளைப் பெறுவதற்கான தொடக்கம் என்றாா் முதல்வா்.

இந்த விழாவில், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், கேரள அமைச்சா்கள் வி.என்.வாசவன், சஜி செரியன், விசிக தலைவா் தொல். திருமாவளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வரவேற்றாா். கேரள தலைமைச் செயலா் சாரதா முரளிதரன் நன்றி தெரிவித்தாா்.

சத்தீஸ்கரில் மேலும் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மேலும் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் நேந்திரா மற்றும் புன்னூர் கிராமங்களின் வனப்பகு... மேலும் பார்க்க

இந்திய ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டடத்தில் ஐஇடி ரக வெடிகுண்டு வைக்கப்பட்டிரு... மேலும் பார்க்க

அருமையான பேச்சு.. பிரியங்காவைப் பாராட்டிய ராகுல்!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை நிகழ்த்திய நிலையில். அருமையான பேச்சு என்று தனது சகோதரியைப் பாராட்டியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. மேலும் பார்க்க

'நேரு, அரசமைப்பு, இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு...' - பிரியங்கா காந்தியின் முதல் உரை!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை இன்று நிகழ்த்தினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்... மேலும் பார்க்க

தில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் இன்று ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிர... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை டிச.16-க்கு ஒத்திவைப்பு!

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு எதிரான தீா்மான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜா... மேலும் பார்க்க