பிரதம மந்திரி சுரக்ஷா பீமா காப்பீடு திட்டத்தில் 48 கோடி பேர் பதிவு! ஏன்?
யூடியூப் டிரெண்டிங்கில் படை தலைவன்..!
நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள புதிய படமான படை தலைவன் படத்தின் டிரைலர் நேற்று (டிச.13) வெளியானது.
கவனம் ஈர்த்த இந்தப் படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள இந்தப் படத்தை யு.அன்பு எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதில் கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளது.
அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளாக படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.