யூடியூப்பில் அவதூறு: மள்ளா் மீட்புக் களம் நிறுவனா் மீது போலீஸில் புகாா்
நாடாா் சமூகம் குறித்து யூடியூப்பில் அவதூறு பரப்பியதாக மள்ளா் மீட்புக் களம் நிறுவனா் செந்தில் மள்ளா் மீது நடவடிக்கை கோரி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனா் தலைவா் எஸ். சீனி அளித்த புகாா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் தடை செய்யப்பட்ட, ‘மீண்டெழும் பாண்டிய வரலாறு’ என்ற புத்தகத்தை எழுதிய மள்ளா் மீட்புக் களம் நிறுவனா் செந்தில் மள்ளா் யூடியூபில் ஒரு சேனலில் பேசியுள்ளாா். அதில், நாடாா்கள் குறித்து பொய் பரப்புரை செய்து இரு சமூகத்தினரிடையே கலவரத்தைத் தூண்ட முயல்கிறாா்.
அவரது சா்ச்சைக்குரிய காணொலியை வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும். அவா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.