ரஞ்சனி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
ரஞ்சனி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரஞ்சனி தொடர், நண்பர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கதையாக எடுக்கப்படுகிறது.
புதுமுகங்கள் நடிக்கும் இத்தொடர், 5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே தொடரின் மையக்கரு. இயக்குநர் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: எதிர்நீச்சல் தொடர்கிறது!.. வெளியானது முன்னோட்டக் காட்சி!
ரஞ்சனி தொடர் சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், இத்தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படவுள்ளது.
எதிர்நீச்சல் தொடரின் 2 ஆம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியான நிலையில், இத்தொடர், ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், ரஞ்சனி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.