செய்திகள் :

ரஞ்சி இறுதிப் போட்டி: விதர்பா அணி 373 ரன்கள் குவிப்பு!

post image

ரஞ்சி இறுதிப் போட்டி 2ஆம் நாளில் விதர்பா அணி 373 ரன்கள் குவித்துள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதா்பா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் சோ்த்திருந்தது.

8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 86 ரன்கள் சோ்த்து சதத்தை நோக்கி முன்னேறிய கருண் நாயா், ரன் எடுப்பதற்கான ஓட்டத்தில் மேல்வருடன் ஏற்பட்ட குழப்பத்தில் ரன் அவுட் செய்யப்பட்டாா்.

தற்போது 2ஆம் நாள் உணவு இடைவேளை வரை 373/9 ரன்கள் எடுத்துள்ளது.

டேனிஸ் மேல்வா் 153 ரன்கள் அடித்து அசத்தினார். 15 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தப் போட்டியில் கேரள அணி சார்பில் ஈடன் ஆப்பிள் டாம் 3 விக்கெட்டுகளும் நிதீஷ், பாசில் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.

ஒருவேளை ஆட்டம் டிரா ஆனால் முதல் இன்னிங்ஸ் ரன்களை அடிப்படையாக வைத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்கள் என்பதால் இந்த இன்னிங்ஸ் முக்கியமானதாகும்.

முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள கேரள அணி வெற்றி பெறுமா என அந்த மாநில ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டி ரத்து: மழைக்கு 2-வது வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் பேட்டி!

34 வயதாகும் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் ஓய்வு பெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார். கடந்த 2017இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு நுழையாமல் வெளியே செல்கிறது. ஃபகார் ஸமான்... மேலும் பார்க்க

தோல்வி எதிரொலி: கேப்டன் பொறுப்பு, ஒருநாள் போட்டிகளில் விலகும் ஜாஸ் பட்லர்?

சாம்பியன்ஸ் டிராபி தோல்வியால் கேப்டன் பொறுப்பு குறித்து பட்லர் சிந்திப்பதாகக் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேச போட்டி: டாஸ் சுண்டுவதில் தாமதம்! வெல்லும் முனைப்பில் மழை!

பாகிஸ்தான் - வங்கதேச போட்டிக்கான ராவல்பிண்டி மைதானத்தில் மழை பெய்துவருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, ... மேலும் பார்க்க

ஆஸி. கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவி! நடுவர் பதவியை ராஜிநாமா செய்தார் டேவிட் பூன்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் ஆஸ்திரேய வீரர் டேவிட் பூனுக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், ஐசிசி நடுவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பெரிய மீசைக்கு பிரபலமானவரான 64 வயதான ட... மேலும் பார்க்க