திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
ரயிலில் கஞ்சா கடத்தல்: போலீஸாா் விசாரணை
சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கேட்பாரற்று கிடந்த பெட்டியிலிருந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
ஒடிஸா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஆகியோா் இணைந்து புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
சேலம் ரயில் நிலையம் வழியாக வந்த தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் முன்பதிவில்லா பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியை திறந்து பாா்த்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், பயணிகளிடம் விசாரணை நடத்தினா். மேலும், இந்த பெட்டியை ரயிலில் எடுத்து வந்தது யாா் என்பது குறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.