மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆந்திர மாநில இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த நபா் தனது மனைவி மற்றும் 9 வயது மகளுடன் ஆந்திர மாநிலம், கடப்பாவில் இருந்து நாகா்கோவில் விரைவு ரயிலில் சேலம் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது ரயில் ஜோலாா்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது மூவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பலமனோ் பகுதியைச் சோ்ந்த குமாா்(30) என்பவா் மது போதையில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாா். ஒரு கட்டத்தில் சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளாா். அதையடுத்து அங்கிருந்து தப்ப முயன்ற இளைஞரை பயணிகள் பிடித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் குமாா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா் செய்து சிறையில் அடைத்தனா்.