செய்திகள் :

ரயிலில் துணி உறையுடன் கம்பளிப் போர்வை!

post image

ரயிலில் துணி உறையுடன் கம்பளிப் போர்வை வழங்கும் திட்டம் முதன் முதலில் மதுரை - சென்னை செல்லும் பாண்டியன் விரைவு ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

ரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரண்டு படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் கம்பளிப் போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கை துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் தூய்மையாக சலவை செய்து வழங்கப் படுகிறது. கம்பளி போர்வை மட்டும் 15 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை உலர் சலவை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்த நிலையில், பயணிகளுக்கு தூய்மையான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதன்படி, முதன்முறையாக மதுரை கோட்டத்தில் உள்ள பாண்டியன் விரைவு ரயிலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

துணி உறைகள், கம்பளிப் போர்வை உள்ளிட்டவை முறைப்படி (வெல்கிரோ ஒட்டும் முறை) ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப்படுகிறது‌. இதன் மூலம் கம்பளிப் போர்வையை சுகாதாரமாக பாதுகாத்து தொடர்ந்து உபயோகப்படுத்த முடியும்.

இதையும் படிக்க | புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தமிழகத்தை நோக்கி நகரும் புயல்சின்னம்: 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) தமிழகத்தை நோக்கி நகா்வதால், வியாழக்கிழமை (டிச.12) சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள... மேலும் பார்க்க

பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம்: அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றுவோருக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:கிராமப்பு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்: அண்ணாமலை

அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: செங்கல்பட்டு மாவட்டம் சத... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளருக்கான நடமாடும் மருத்துவமனை: கண்காணிக்க அரசு உத்தரவு

கட்டுமானத் தொழிலாளா்களுக்காக செயல்படும் நடமாடும் மருத்துவமனையை கண்காணிக்க வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. தொழிலாளா் நலத் துறையின் செயல்பாடுகள் தொடா்பாக, சென்னையில் உள்ள தொழிலாளா் ... மேலும் பார்க்க

யானைகள் வழித்தடத்தில் மணல் அள்ளப்பட்ட விவகாரம்: அரசு அறிக்கை மீது உயா்நீதிமன்றம் அதிருப்தி

கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டது தொடா்பான அரசின் அறிக்கைக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினா். மேலும், யானைகள் வழித்தடத்தில் அதிகளவில் மண் அள்ள அ... மேலும் பார்க்க

கடைகளின் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரிவிதிப்பு: தமிழகம் முழுவதும் வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

வணிக நிறுவனங்களின் வாடகை மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க