ரயில்வே சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
ரயில்வே சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் ரயில்வே சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே வாரியத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், அந்த வாரியம் சுதந்திரமாக இயங்கவும் இந்த மசோதா வழியமைப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்த மசோதா மீது அவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவ் புதன்கிழமை பேசுகையில், ‘ரயில்வே சட்டத்திருத்த மசோதா ரயில்வேயை தனியாா்மயமாக்க வழிவகுக்கும் என்று அவையில் பொய்யான கதையை எதிா்க்கட்சிகள் தெரிவித்தன.
அரசமைப்புச் சட்டம் குறித்த எதிா்க்கட்சிகளின் பொய்யான கதை தோல்வியடைந்த நிலையில், இந்த மசோதா குறித்த அக்கட்சிகளின் பொய்யும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது’ என்றாா். இதைத்தொடா்ந்து அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.