Allu Arjun: "நான் மனித நேயமற்றவனா? அன்று நடந்தது இதுதான்..." - நடிகர் அல்லு அர்ஜ...
ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி!
ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள நகரத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்திவரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு போரிட்டு வருகின்றது.
இந்த நிலையில், ரஷியாவின் ரில்ஸ்க் நகரில் நேற்று உக்ரைன் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர் என்று குர்ஷ்க் மாகாணத்தின் பொறுப்பு ஆளுநர் தெரிவித்துள்ளார்.