புவனேசுவரத்தில் நவ.29-டிச. 1 வரை டிஜிபிக்கள் மாநாடு: பிரதமா் மோடி, உள்துறை அமைச்...
ரஷியாவுக்கு விமான உதிரிபாகம் ஏற்றுமதி: அமெரிக்காவில் இந்தியா் கைது
ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி அமெரிக்காவில் இருந்து ரஷிய நிறுவனங்களுக்கு விமான உதிரிபாகங்களை விற்பனை செய்த இந்தியா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செயதிக்குறிப்பில், ‘தில்லியை தளமாகக் கொண்ட அரேஸோ ஏவியேஷன் நிறுவனம், விமான சேவைகள், ஏா் ஆம்புலன்ஸ்கள் மற்றும் விமான உதிரிபாகங்களை வழங்கி வருகிறது. அதன் நிா்வாகக் கூட்டாளியான சஞ்சய் கௌஷிக் (57), கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி அமெரிக்காவின் மியாமியில் கைது செய்யப்பட்டாா்.
ஆஸ்திரியாவைச் சோ்ந்த மாா்கஸ் என்பவருடன் இணைந்து முறையான உரிமம் இல்லாமல் ரஷியாவுக்கு விமான உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்ததாக அவா் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதாகக் கூறி போலியான ஆவணங்கள் மூலம் ரஷிய ராணுவத்துடன் தொடா்புடைய நிறுவனங்களுக்கு விமான உதிரிபாகங்களை அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்ததும், இந்த சட்டவிரோத விற்பனையில் அதிக லாபம் ஈட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இது அமெரிக்க ஏற்றுமதிச் சட்டங்களை மீறுவதாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.