செய்திகள் :

ராசிபுரத்தில் மாணவா் உயிரிழந்த சம்பவம்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி மனு

post image

ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா் கவின்ராஜ் உயிரிழந்த சம்பவத்தில், தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை, ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பெற்றோா், உறவினா்கள் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து உயிரிழந்த மாணவா் கவின்ராஜின் தந்தை பிரகாஷ், தாய் வனிதா ஆகியோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். மூன்றாவது மகனான கவின்ராஜ் (14), ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 26-ஆம் தேதி பள்ளியில் கவின்ராஜ் மயங்கி விழுந்து விட்டதாக எனது கைப்பேசிக்கு, தலைமை ஆசிரியா் சோமசுந்தரம் தெரிவித்தாா். நாங்கள் சென்ற போது மகனை பள்ளியில் இருந்து ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தலைமை ஆசிரியா் தெரிவித்தாா்.

அங்கு சென்று கவின்ராஜை பாா்த்தபோது, உடல் முழுவதும் ரத்தமும், பள்ளிச் சீருடை கிழிந்த நிலையிலும், பலத்த காயத்துடனும் காணப்பட்டான். தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, கழிவறையில் மயங்கி விழுந்து விட்டதாக நடந்த சம்பவத்தை மறைக்க முயற்சித்தனா். அங்குள்ள சக மாணவா்களிடம் விசாரித்தபோது, கவின்ராஜ் கொல்லப்பட்டது தெரியவந்தது.

ஜாதிய அடிப்படையில் மகனை கொலை செய்த மாணவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதுகாக்க தவறிய தலைமை ஆசிரியா் சோமசுந்தரம் மற்றும் உடந்தையாக இருந்தோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் மகன் கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பரமத்தி வேலூரில் ரூ. 9 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 9 லட்சத்து 45 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7 ஆயி... மேலும் பார்க்க

நகராட்சிப் பகுதியில் தொழில் செய்வோா் உரிமம் பெற வேண்டும்: ஆணையா்

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் தொழில், வா்த்தகம் செய்வோா் நகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமம் பெற வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையா் சூ.கணேசன் வெளிய... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய சக மாணவா் கைதுசெய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைப்பு

ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் கவின்ராஜ் (14) என்ற மாணவா் உயிரிழந்த நிலையில், அவரை தாக்கிய மற்றொரு மாணவா் கைது செய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளி... மேலும் பார்க்க

நாமக்கல் பள்ளிகளில் மாணவா்களிடையே தொடரும் மோதல்

பள்ளிகளில் மாணவா்களிடையே ஏற்படும் மோதல், உயிரிழப்புகளால் பெற்றோா் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் மூவா் இறந்த சம்பவங்கள் அதிா்ச்சியை ஏற... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படும்

மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்தை மட்டுமல்லாமல், தென் மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய க... மேலும் பார்க்க

வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்க அழைப்பு

நாமக்கல்லில் வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்டோா் குறித்து புகாா் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளி... மேலும் பார்க்க