செய்திகள் :

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: சமநிலையாக செல்லும் முன்னிலை!

post image

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 7 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் மற்றும் சலும்பர் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் காலமானதாலும், அந்த 7 தொகுதிகளிலும் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தியோலி-உன்னியாரா, கின்வ்ஸார், ராம்கர், தௌசா, சலும்பர், சோரசி, ஜுன்ஜுனு ஆகிய 7 தொகுதிகளிலும் சனிக்கிழமை (நவ. 23) காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை 10.30 மணி நிலவரப்படி

தியோலி-உன்னியாரா, கின்வ்ஸார் - பாஜக

ராம்கர், தவுசா - காங்கிரஸ்

சலும்பர், சோரசி - பாரத ஆதிவாசி கட்சி

ஜுன்ஜுனு - சுயேட்சை வேட்பாளர்

இதையும் படிக்க:வெற்றி உறுதி: மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற நவ. 13 ஆம் தேதியிலேயே மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2, கேரளம், சத்தீஸ்கா், மேகாலயம், குஜராத்தில் தலா ஒரு தொகுதி என 33 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் மக்களவை தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, உத்தரகண்ட் மற்றும் கேரளத்தில் தலா ஒரு தொகுதி என 15 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

ஜார்க்கண்ட் தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி பின்னடைவு!

ஜார்க்கண்டில் கான்டே தொகுதியில் களமிறங்கிய ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா முர்மு சோரன் 3060 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது... மேலும் பார்க்க

அசாம் சாலை விபத்தில் 8 பேர் பலி, 3 பேர் காயம்

கவுகாத்தி: அசாமின் பஜாலி மற்றும் துப்ரி மாவட்டங்களில் சனிக்கிழமை நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 8 பேர் பலியாகினர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் காயமடைந்த இருவரும் ஃப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மகாயுதி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது பெண்கள்தானா?

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வெற்றியை நோக்கி மகாயுதி: ஏற்க முடியாது - சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றியை உறுதி செய்திருக்கும் நிலையில், இதனை மக்களின் தீர்ப்பு என ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிவசேனை (உத்தவ்) தலைவர் சஞ்சய் ரௌத் கூறியிருக்கிறார்.மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

சிக்கிம் இடைத்தேர்தல் வெற்றி அறிவிப்பு!!

சிக்கிம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.சிக்கிம் மாநிலத்தின் நம்சி, சோரெங் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், வ... மேலும் பார்க்க

நான்தேட் தொகுதியில் தொடர்ந்து பாஜக முன்னிலை!

மகாராஷ்டிரத்தின் நான்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜவின் சதுக்ராவ் ஹம்பார்டே முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் எம்பி வசந்த் சவான் ஆகஸ்ட் 26ல... மேலும் பார்க்க