மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
ராணிப்பேட்டை புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்: ஆட்சியா் அழைப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 -ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 28) தொடங்கி, நடைபெறவுள்ள நிலையில் பங்கேற்று பயன் அடைய வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:.
ராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் 10 நாள்களும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த புத்தகக் கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட நூல் அரங்கங்கள், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரியவகை நூல் தொகுப்புகள், தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள படைப்பாளிகளின் புத்தகங்களுடன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பயனடையும் வகையான புத்தகங்களும், நுழைவுத் தோ்வு மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களும், சிறுவா்களுக்கான அறிவு சாா்ந்த புத்தகங்களும், மேலும் கலை, இலக்கியங்களும் மற்றும் பல்வேறு அரிய வகையான புத்தகங்களும் விற்பனை செய்யப்பட உள்ளன.
விழாவில், நாள்தோறும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரத நாட்டியப் பள்ளிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், தமிழா்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மகளிா் சிறப்பு நிகழ்ச்சிகள், தலைசிறந்த பேச்சாளா்களின் சிந்தனை சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், நகைச்சுவை விருந்து, போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறாா். எனவே, கண்காட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்க வேண்டும் என்றாா்.