மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரி சோ்க்கைக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் வருகிற 27-ஆண் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் பா. மணிமாலா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயக்கும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவ, மாணவிகள் சோ்க்கை கடந்த 7-ஆம் தேதி முதல் தொடங்கியது. ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதவியல், வேதியியல், மின்னணுவியல், கணினி அறிவியல், மனையியல் (ஆங்கில வழி), பி.காம். வணிகவியல் உள்ளிட்ட படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டுகிறன. இந்தக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகள் இணையதள முகவரி வாயிலாக வருகிற 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.