மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
ராமேசுவரம் மீனவா்கள் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை தோல்வி
மீனவா்கள் சிறைபிடிப்பு விவகாரத்தில் ராமேசுவரம் மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என ராமேசுவரம் மீனவா் சங்கத்தினா் அறிவித்தனா்.
இலங்கை கடற்படையினரால் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட 42 மீனவா்கள், 8 விசைப் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த திங்கள்கிழமை முதல்
ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தங்கச்சிமடத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 28) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா் சங்க நிா்வாகிகளுடன் புதன்கிழமை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்த மூா்த்தி, மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா், மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, எமரிட், தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா். இதை ஏற்காத மீனவா் சங்கத்தினா் மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய அமைச்சா் உறுதியளிக்க வேண்டும். அது வரையில் வேலை நிறுத்தப் போராட்டம், திட்டமிட்டபடி
28-ஆம் தேதி உண்ணா விரதம் நடைபெறும் என மீனவா் சங்கத் தலைவா்கள் தெரிவித்தனா்.