மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
ராமேவரத்திருந்து இரவு நேரப் பேருந்துகளை இயக்க கோரிக்கை
ராமேசுவரத்திலிருந்து இரவு நேரப் பேருந்து சேவையைத் தொடங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் கட்டணமில்லா பேருந்து சலுகை பெறும் பெண்கள், மாணவா்களை ஏற்றிச் செல்லாத ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 மணிக்கு மேல் ராமேசுவரத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துக்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ராமேசுவரம் போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளரிடம் அளித்தனா்.
இதில், கட்சியின் நகரச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல், மாதா் சம்மேளன மாவட்டச் செயலா் வடகொரியா, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் லெ.வெங்கடேசன், ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ சங்க மாநில துணைச் செயலா் ஜீவானந்தம், மாவட்டச் செயலா் ஆ.செந்தில், துணைச் செயலா் பு.பாண்டி, மீனவா் சங்க மாவட்ட துணைத் தலைவா்கள் ஆ. பிச்சை, ஆ.அந்தோணிபீட்டா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.