ராமேஸ்வரம்: நண்பரைக் கொன்று காட்டுக்குள் வீசிய இளைஞர்கள்; ஓராண்டுக்குப் பின் சிக்கியது எப்படி?
ராமேஸ்வரம் சம்பை கிராமத்தைச் சேர்ந்த நாகு மகன் விஜயகுமார், இதே கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், சஞ்சய் ஆகிய மூவரும் நண்பர்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சம்பை கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது மூவருக்கும் இடையே தகராறு எழுந்த நிலையில், முத்துக்குமாரும், சஞ்சயும் சேர்ந்து விஜயகுமாரை அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் விஜயகுமாரின் உடலை வெளியாட்கள் செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் வீசிய அவர்கள், ஏதும் நடக்காதது போல் கிராமத்திற்குத் திரும்பினர். இந்நிலையில் வீடு திரும்பாத விஜயகுமார் குறித்து அவரது உறவினர்கள் இருவரிடமும் விசாரித்துள்ளனர். 'விஜயகுமார் எங்குப் போனார் எனத் தெரியவில்லை' என அவர்கள் இருவரும் நாடகமாடியுள்ளனர்.
இதையடுத்து விஜயகுமாரின் தாய், தனது மகனைக் காணவில்லை என ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, மாயமான விஜயகுமாரைத் தேடியும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த தீபாவளியன்று முத்துக்குமார், சஞ்சய் ஆகியோர் வேறு சில நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதை தலைக்கு ஏறவே விஜயகுமாரைக் கொலை செய்ததை உற்சாக மிகுதியில் உளறியுள்ளனர்.
இத்தகவல் தனிப்பிரிவு காவல்துறைக்குத் தெரியவரவே முத்துக்குமார், சஞ்சய் ஆகிய இருவரையும் பிடித்து தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். விசாரணையின்போது கொலை செய்ததை ஒப்புக் கொண்டதுடன், கொலை செய்யப்பட்ட விஜயகுமாரின் எலும்புகளைச் சேகரித்து கடலில் வீசியதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறை, அவர்களை சம்பை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்குக் கிடந்த விஜயகுமாரின் முதுகு தண்டுவட எழும்பு மற்றும் அவர் அணிந்திருந்த வெள்ளி சங்கிலியைக் கைப்பற்றியதுடன் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பனைக் கொலை செய்து காட்டுக்குள் வீசிய வாலிபர்கள் போதையில் உளறியதால் காவல்துறையிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs