Eng vs Ind: "பும்ரா ஆடுகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல; காரணம்..." - கிரெக் சே...
ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 28 உதவி மேலாளர், சட்ட அலுவலர்,மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: RBISB/DA/02/2025-26
நிறுவனம்: Reserve Bank of India
குரூப் 'ஏ' பதவிகள்
பதவி: Assistant Manager (Rajbhasha)
காலியிடங்கள்: 3
பதவி: Assistant Manager (Protocol & Security)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.62,500
குரூப் 'பி' பதவிகள்
பதவி: Legal Officer
காலியிடங்கள்: 5
பதவி: Manager (Technical-Civil)
காலியிடங்கள்: 6
பதவி: Manager (Technical-Electrical)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.78,450
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், பிஇ, பி.டெக், எல்எல்பி மற்றும் ஹிந்தியில் முதுகலைப் பட்டம், ஹிந்தியில் இருந்து ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 + 18 சதவீதம் ஜிஎஸ்டி, இதர அனைத்து பிரிவினரும் ரூ.600 + 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:www.rbi.org.in, https://opportunities.rbi.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 131.7.2025
மேலும் விவரங்கள் அறியஇங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.