பேரிடர் காலங்களில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது: பிரியங்கா
ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் முதல் டி20 சதம்..! தொடரை வென்ற தெ.ஆ.!
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய 2ஆவது டி20 போட்டியில் தெ.ஆ. அணி த்ரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
இதில் முதல் டி20யில் வென்ற தெ.ஆ. அணி 2ஆவது போட்டியிலும் வென்று 2-0 என தொடரை வென்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 206/5 ரன்கள் எடுத்தது. அதில் சையூம் அயூப் 98* ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி 9 பந்துகள் விளையாட முடியாமல் ஆகிவிட்டது. இல்லையென்றால் அவரும் சதமடித்திருப்பார்.
அடுத்து விளையாடிய தெ.ஆ. அணியில் தொடக்க வீரரான ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் தனது முதல் சர்வதேச டி20 சதமடித்து அசத்தினார். வன்டெர் டு சென் 66 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 63 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடித்து 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
19.3 ஓவரில் 210/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தெ.ஆ. த்ரில் வெற்றி பெற்றது.
ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.