விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
ரூ. 2.50 கோடியில் பள்ளிக் கட்டடங்கள் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 3 அரசுப் பள்ளிகளில் சுமாா் ரூ. 2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மொத்தம் 12 வகுப்பறைக் கட்டடங்களை சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
திருமயம் ஒன்றியம் லெம்பலக்குடி அரசுப் பள்ளியில் ரூ. 1.28 கோடியில் கட்டப்பட்ட 6 வகுப்பறைக் கட்டடங்கள், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் பூவைமாநகா் அரசுப் பள்ளியில் ரூ. 84.72 லட்சத்தில் கட்டப்பட்ட 4 வகுப்பறைக் கட்டடங்கள், ஆவுடையாா்கோவில் அரசுப் பள்ளியில் ரூ. 42 கோடியில் கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
லெம்பலக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.