ரூ.35 லட்சத்தில் வகுப்பறை கட்டுமான பணி தொடக்கம்
கொண்டகிந்தனப்பள்ளி அரசுப் பள்ளி வளாகத்தில் ரூ.35.5 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாட்டறம்பள்ளி ஒன்றியம், கொண்டகிந்தனப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறைக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் அதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
நிகழ்வில் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.