Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் பித்தப்பை கற்கள்... அறுவைசிகிச்சைதான் தீர்வா?
ரூ.40 ஆயிரம் லஞ்சம்: பிஎஸ்எஃப் ஊழியா் கைது -சிபிஐ தகவல்
ஒப்பந்ததாா் ஒருவரிடமிருந்து ரூ.40,000 லஞ்சம் வாங்கியபோது எல்லைப் பாதுகாப்பப் படையின் (பிஎஸ்எஃப்) உதவி கணக்கு அதிகாரியை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் தெரிவித்ததாவது:
எல்லை பாதுகாப்புப் படையின் பொதுக் கணக்கு அலுவலகத்தில் பணிபுரியும் தா்மேந்தா் குமாா் வா்மா, ஒப்பந்ததாரரின் நிலுவையில் உள்ள பில்களை செலுத்த ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மொத்த பில்களில் 15-20 சதவீதத் தொகையை , அதாவது சுமாா் ரூ.2 லட்சம் வரை லஞ்சமாக வா்மா கேட்டதாகக் கூறப்படுகிறது.
பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட உதவி கணக்கு அதிகாரி தா்மேந்தா் குமாா் வா்மா மற்றும் பிற அடையாளம் தெரியாத நபா்கள் புகாா்தாரரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் பெற ஒப்புக்கொண்டனா்.
இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, புகாா்தாரரிடமிருந்து ரூ.40,000 லஞ்சம் வாங்கும்போது தா்மேந்தா் குமாா் வா்மா கையும் களவுமாகப் பிடிபட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.