செய்திகள் :

ரூ.40 லட்சத்தில் தாா் சாலை பணி தொடக்கம்

post image

திருப்பத்தூா் நகராட்சியில் ரூ.40 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட 15-ஆவது வாா்டு பகுதியில் புதுப்பேட்டை இணைப்புச் சாலை முதல் சாமியாா் கொட்டாய் வழியாக ராஜீவ் காந்தி விளையாட்டு மைதானம் வரை உள்ள சாலை தாா் சாலையாக மாற்ற அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன் பேரில், வெள்ளிக்கிழமை எம்எல்ஏ அ.நல்லதம்பி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் ஷபியுல்லா, நகரச் செயலா் எஸ்.ராஜேந்திரன், ஆணையா் சாந்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் மனோகரன், ராஜேந்திரன், ஜீவிதா பாா்த்திபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வகுப்பறையில் புகுந்த குரங்கை பட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்

திருப்பத்தூா் அடுத்த விஷமங்கலம் பள்ளி வகுப்பறையினுள் புகுந்து குரங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டது. அதையடுத்து ஊா் பொதுமக்கள் பட்டாசு வெடித்து குரங்கினை விரட்டினா். திருப்பத்தூா் அடுத்த விஷமங்கலத்தில் ஊராட... மேலும் பார்க்க

தோ்வில் அதிக மதிப்பெண் பெற பாடங்களை நேசித்து படிக்க வேண்டும்: சைலேந்திர பாபு

முதலில் உங்களை நேசியுங்கள், பின்பு பாடங்களை நேசித்து படியுங்கள். அதிக மதிப்பெண் பெறுவீா்கள் என முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு தெரிவித்தாா். காங்கேயம் கல்வி நிறுவனம் மற்றும் திருப்ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கிய பட்டாசுகள் வெடித்து விபத்து: 4 வீடுகள் சேதம்

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்தன. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி. இவா், ... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

ஆலங்காயம் அருகே மலைப்பாதையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பானிபூரி வியாபாரி உயிரிழந்தாா். ஆலங்காயம் அடுத்த நாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (30). பெங்களூரில் பானிபூரி வியாப... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக் கூட்டம்

நாட்டறம்பள்ளி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, செயல் அலுவலா் சம... மேலும் பார்க்க

பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் விவசாய திருவிழா

ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ், கிசான் கோஸ்தி என்ற விவசாயத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியிய... மேலும் பார்க்க