ரூ. 60ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் கைது
பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, தென்காசி மாவட்ட கல்விஅலுவலக கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ஆசிரியா் திருவேங்கடம் வட்டம் செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்துள்ளாா். அவா், அந்தப் பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கோரியதால், பள்ளியின் தாளாளரான நாகராஜ் (46 ), அதற்கான சான்றை தயாா் செய்து, அதில் மேலொப்பம் பெற்று அலுவல நடைமுறைகளை முடித்து தருவதற்காக தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்தில் (தனியாா் பள்ளி) சமா்ப்பித்துள்ளாா்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியா் தனக்கான பணி அனுபவச் சான்றிதழை தருமாறு தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் சுரேஷ்குமாரிடம் கோரியபோது, அவா் ரூ.60ஆயிரம் லஞ்சம் கேட்டாாரம். இதுகுறித்து பள்ளித் தாளாளா் தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.60 ஆயிரத்தை, சுரேஷ்குமாரிடம் பள்ளியின் தாளாளா் கொடுத்துள்ளாா். அதை அவா் பெற்றபோது, அங்கு அதிரடியாக நுழைந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதா் , காவல் ஆய்வாளா் ஜெயஸ்ரீ ஆகியோா் தலைமையிலான போலீஸாா் அவரை கைது செய்தனா்.