இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது
ரூ.7 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தனியாா் நிறுவன இயக்குநரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ஊரப்பாக்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்கதுரை-பூா்ணிமா தம்பதி. இவா்கள் சேலையூா் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். இவா்கள், வாடகைக்கு ஒப்பந்தம் செய்த வீடுகளை குத்தகைக்கு அளிப்பதாக விளம்பரப்படுத்தி 91 பேரிடம் இருந்து ரூ.7 கோடிக்கு மேல் வசூலித்து ஏமாற்றியுள்ளனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில், அசோக் நகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பூா்ணிமாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த நிறுவனம் தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் பொருளாதார குற்றப்பிரிவு, காவல் ஆய்வாளா், ஓ.செண்பகதேவி கைப்பேசி: 99944 99091என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்று போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.