ரேஷன் அரிசி கடத்தல்: ஆட்டோ பறிமுதல்
கொல்லங்கோடு அருகே கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை ஆட்டோவுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கொல்லங்கோடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கச்சேரிநடை பகுதியில் ரோந்து சென்றனா். அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியைச் சோ்ந்த விக்டா் (64) என்பவா் கேரளத்துக்கு 300 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
ஓட்டுநா், ஆட்டோ, ரேஷன் அரிசியை போலீஸாா் நாகா்கோவில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.