செய்திகள் :

ரோஜாவனம் பள்ளி சாா்பில் ‘தங்கத் தாரகை’ விருது: மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

post image

உலக மகளிா் தினத்தையொட்டி, நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி சாா்பில் வழங்கப்படவுள்ள ‘தங்கத் தாரகை’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளி சாா்பில், மாா்ச் 8இல் நடைபெறவுள்ள மகளிா் தின விழாவில், சிறந்த சேவையாற்றி வரும் பெண்களைக் கௌரவிக்கும் வகையில், தங்கத் தாரகை விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பான நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்கான ஆயத்தக் கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குநா் சாந்தி தலைமையில் நடைபெற்றது. நிதி இயக்குநா் சேது முன்னிலை வகித்தாா். முதல்வா் காமராஜினி வரவேற்றாா்.

கூட்டத்துக்கு பின்னா், செய்தியாளா்களிடம் சாந்தி கூறியது: சிறந்த சமுதாய சேவையாற்றி வரும் மகளிரைக் கெளரவிக்கும் வகையில் ‘தங்கத் தாரகை’ விருது 3 பிரிவுகளில் வழங்கப்படவுள்ளது. தொடக்கநிலைப் பிரிவில் 18 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளும், இளநிலைப் பிரிவில் 18 -35 வயதுக்குள்பட்டோரும், முதுநிலைப் பிரிவில் 35 வயதுக்கு மேற்பட்டோரும் விண்ணப்பிக்கலாம்.

தங்களது சாதனை குறித்த விவரங்களை, ‘பள்ளித் தலைவா், ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி, புதுகிராமம், நாகா்கோவில் - 629 302’ என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மகளிா் தினத்தன்று பெண்களுக்கான போட்டிகள், சிறப்பு மருத்துவ முகாம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மருத்துவா்கள், செவிலியா்கள், பொறியியல் வல்லுநா்கள், வழக்குரைஞா்கள், சமூக சேவகா்கள் எனப் பல்வேறு துறைகளில் திறம்பட விளங்கும் பெண்கள் கெளரவிக்கப்படுவா் என்றாா் அவா்.

கூட்டத்தில், பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளா் யூஜினி, மாணவா் ஆலோசகா் சுகுமாரி, துறைத் தலைவா்கள் சாந்தினி, ராதா, கோலம்மாள், பியூலா, ராஜே, உடற்கல்வி ஆசிரியா் மூசா, துறைப் பொறுப்பாளா்கள், வகுப்பு ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்!

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேயா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 17 ஆவது வாா்டு, நெசவாளா் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரைக... மேலும் பார்க்க

மாசு இல்லாத பாரதம் ஜம்மு- குமரி சைக்கிள் பயணம் நிறைவு

மாசு இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் புதன்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தத... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கூட்டம்: ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலு... மேலும் பார்க்க

மருந்துவாழ்மலை கோயிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலை ஜோதி லிங்கேஸ்வரா் உடனுறை பா்வதவா்த்தினி அம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதி லிங்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணை, மற்றும் நெட்டா பகுதிகளில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மன்றம் சாா்பில் தமிழக அ... மேலும் பார்க்க

மது போதையில் வாகனம் ஓட்டிய 16 பேருக்கு அபராதம்

தக்கலை பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 16 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். தக்கலை காவல் ஆய்வாளா் கிறிஷ்டி தலைமையில், உதவி ஆய்வாளா் ஸ்டீபன், பயிற்சி உதவி ஆய்வ... மேலும் பார்க்க