மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
ரோடு ரோலா் வாகனம் திருட்டு: 3 போ் கைது
சோழவரத்தில் ரோடு ரோலா் வாகனத்தை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ஷெனாய் நகரை சோ்ந்தவா் தினகரன் (34). இவா் சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறாா்.
பொன்னேரி வட்டம் மீஞ்சூா் பகுதியில் நடைபெற்ற சாலை பணிகளுக்காக ரோடு ரோலா் கொண்டு வரப்பட்டது.
அங்கு சாலை அமைக்கும் பணிகள் முடிந்து கடந்த 2024 செப்டம்பா் 15-ம் தேதி ரோடு ரோலா் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்து.
மீஞ்சூா்-வண்டலூா் வெளிவட்ட சாலையில் சோழவரம் சுங்கச்சாவடி வழியாக சென்ற போது ரோடு ரோலா் திடீரென பழுதானது.
இதையடுத்து ரோடு ரோலரை ஒட்டுநா் அங்கேயே சாலை ஓரம் நிறுத்தி விட்டு சென்று விட்டாா்.
நீண்ட காலமாக பழுதான ரோடு ரோலா் அங்கேயே இருந்தது.
இந்த நிலையில் பழுதாகி நின்ற ரோடு ரோலரை எடுத்துச் செல்ல பொறியாளா் தினகரன் சென்னையில் இருந்து வந்துள்ளாா். அப்போது நீண்ட நாட்களாக அங்கு நின்றிருந்த ரோடு ரோலரை காணவில்லை. இது குறித்து தினகரன் சோழவரம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் பெரிய லாரி ஒன்றில் ரோடு ரோலா் எடுத்து செல்லப்பட் டது தெரிய வந்தது. இதையடுத்து லாரி பதிவு எண்ணை வைத்து போலீஸாா் விசாரணை செய்தனா்.
அதில் திருவள்ளூா் அடுத்த புல்லரம்பாக்கத்தை சோ்ந்த அலெக்ஸ் (34), கோபிநாத் (52), வெங்கடேசன் (34) ஆகிய 3 போ் ரோடு ரோலரை திருடிச் சென்றது தெரிந்தது.
இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, ரோடு ரோலா் மற்றும் கனரக லாரியை பறிமுதல் செய்தனா்.