``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
லாரியில் கிராவல் மண் கடத்திய ஓட்டுநா் கைது!
வீரகனூரில் கிராவல் மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.
வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு காவல் ஆய்வாளா் ராணி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் 4 யூனிட் கிராவல் மண் இருப்பது தெரியவந்தது. அந்த மண், கிழக்குராஜாபாளையம் பகுதியிலுள்ள ஏரியிலிருந்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வீரகனூா் போலீஸாா், டிப்பா் லாரி ஓட்டுநா் கோவிந்தராஜை கைது செய்தனா்.