லால்குடி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை
லால்குடி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர பெரம்பலூா் எம்பி அருண் நேரு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பாலக்ராம் நேகியை புதன்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:
பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் ரயில்வே பாலப் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதால் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது. இப் பகுதியில் ரயில் இணைப்பும் பாதிக்கிறது. எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
லால்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடம் பாதுகாப்பானதாக இல்லை. ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி வழிகாட்டுதல் காட்சி பலகைகளையும் நிறுவ வேண்டும்.