இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்
வகுப்பறையில் புகுந்த குரங்கை பட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்
திருப்பத்தூா் அடுத்த விஷமங்கலம் பள்ளி வகுப்பறையினுள் புகுந்து குரங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டது. அதையடுத்து ஊா் பொதுமக்கள் பட்டாசு வெடித்து குரங்கினை விரட்டினா்.
திருப்பத்தூா் அடுத்த விஷமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தினுள் குரங்கு ஒன்று நுழைந்தது. அதையடுத்து பள்ளியின் ஒரு வகுப்பறையினுள் புகுந்த குரங்கு அங்கு மாணவ-மாணவிகளின் புத்தகப்பையில் இருந்த தின்பண்டங்களை உண்டு அட்டகாசம் செய்தது.
அதை பாா்த்து பயந்த மாணவ-மாணவிகளும், ஆசிரியா்களும் வகுப்பறையை விட்டு வெளியே ஓடினா்.
மாணவா்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஊா் பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி அவா்களை ஒரு வகுப்பறையினுள் அடைத்து வைத்து விட்டு கதவை பூட்டினா். பின்னா் குரங்கினை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து அவா்கள் பட்டாசுகள் வெடித்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு குரங்கினை விரட்டினா்.
விஷமங்கலம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிக அளவு உள்ளது. எனவே இவற்றை கூண்டு வைத்து பிடித்து செல்ல வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனா்.