செய்திகள் :

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து தலைவர் கைது!

post image

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருவதைத் தொடர்ந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும்  ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கடந்த திங்களன்று (நவ. 26) அன்று வங்கதேசக் கொடியை அவமதிப்பு செய்ததாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு அவரை சிறையிலடைக்க வங்கதேச நீதிமன்றம் கடந்த நவ. 27 அன்று உத்தரவிட்டது, இதனால் ஆத்திரமுற்ற அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மேலும் ஒரு இஸ்கான் துறவியான ஷ்யாம் தாஸ் பிரபு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சின்மயி கிருஷ்ண தாஸின் உதவியாளரான ஷ்யாம் தாஸ் பிரபு, அவரைச் சிறையில் சந்திக்கச் சென்றபோது வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை, கொல்கத்தாவிலுள்ள இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவரான ராதாராமன் தாஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ”பிரம்மசாரி ஷ்யாம் தாஸ் பிரபு இன்று சட்டோகிராம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப் பார்ப்பதற்கு பயங்கரவாதியைப் போன்று உள்ளதா? வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துத் துறவிகள் கைது செய்யப்படுவது அதிர்ச்சியாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து | வங்கதேசத்தில் ஹிந்து தலைவா் கைது: முன்னாள் பிரதமா் ஹசீனா கண்டனம்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் மோசமான நிலைமைக்கு காரணமாகவும், அமைதியான வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), இந்திய அரசு இந்தப் பிரச்னையைத் தீர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

வங்கதேச மக்கள் தொகையில் சுமார் 8% ஆக இருக்கும் ஹிந்து சிறுபான்மையினர் அங்கு அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் தமிழ் பாரம்பரிய மாதம்!

ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தைத் தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன் கோரிக்கை வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் 3 ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் நகரில் 3 ஹிந்து கோயில்கள் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஹிந்து ஆன்மிக தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ்... மேலும் பார்க்க

கிழக்கு உக்ரைனில் மேலும் முன்னேறியது ரஷியா

டொனட்ஸ்க் பிராந்தியத்தில் இரு ஊா்களைக் கைப்பற்றியதன் மூலம் கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேறியுள்ளது. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக... மேலும் பார்க்க

‘காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்’

காஸா போா் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பாா்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டா... மேலும் பார்க்க

யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்

ஆயிரக்கணக்கான அதிநவீன கருவிகள் மூலம் யுரேனியத்தை செறிவுபடுத்தும் நடவடிக்கையை ஈரான் விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக ஐ.நா.வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்... மேலும் பார்க்க

பசியால் வாடிய பாலஸ்தீன மக்கள்..! உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவம்!

பசியால் வாடிய பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவத்தின் செயல் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அனுப்... மேலும் பார்க்க