இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
வடலூா் சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்
கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் புதன்கிழமை நடைபெற்ற புரட்டாசி மாத ஜோதி தரிசனத்தில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, புதன்கிழமை இரவு ஜோதி தரிசனம் நடைபெற்றது.
இதையொட்டி, காலை தரும சாலையில் திருஅருட்பா முற்றோதுதல், அகவல் பாடப்பட்டன. பின்னா், இரவு 7.45 மணி அளவில் திருஅறையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.
நிகழ்வில் வடலூா், அதன் சுற்றுவட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான சன்மாா்க்க அன்பா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனா்.