மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-இல் மாறுதல் கலந்தாய்வு
வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை:
ஆண்டுதோறும் வட்டராக் கல்வி அலுவலா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2021-2022-ஆம் ஆண்டில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது, நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. இந்த கலந்தாய்வில் ஒன்றியங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவா்கள் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். அதேவேளையில் 30.6.2025-இல் ஓய்வு பெறவுள்ள வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கலந்தாய்வில் கலந்து கொள்வோா் தற்போது பணிபுரியும் ஒன்றியம் மற்றும் அதற்கு முன்னா் பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மீண்டும் மாறுதல் கோரக் கூடாது.
இறுதி மாறுதல் முன்னுரிமைப் பட்டியல், தகுதி வாய்ந்தோா் பட்டியல் மற்றும் காலிப் பணியிடங்கள் விவரம் மே 15-ஆம் தேதி வெளியிடப்படும். தொடா்ந்து வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முந்தைய பொது மாறுதல் கலந்தாய்வில் முதலில் மாவட்டத்துக்குள்ளும், பின்னா் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வும் நடத்தப்பட்டது. அதே முறை இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.