வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை
வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்கள் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் 42-ஆவது மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் கண்ணப்பன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் மெஸ்மா்காந்தன், மாவட்டச் செயலாளா் பாஸ்கா், மாவட்டப் பொருளாளா் சாமி, மாவட்ட கௌரவ தலைவா் பிரகாஷ், பெருமாநல்லூா் தலைவா் பழக்கடை குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் சௌந்தரராஜன் பேசினாா்.
இதில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், ஆன்லைன் வா்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.