செய்திகள் :

வயதுச் சான்றிதழின் நகல்களைப் பெற கிளப்புகள், மதுபானகூடங்களுக்கு தில்லி அரசு உத்தரவு

post image

தேசிய தலைநகரில் ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வயதை உரிமையாளா்கள் சரிபாா்க்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

மது அருந்துவதற்கான வயது வரம்பு குறித்த சட்டப்பூா்வ நெறிமுறைபடி, வழங்கப்பட்ட அடையாளச் சான்றுகளின் பிரதிகள் மூலம் வாடிக்கையாளா்களை சரிபாக்க வேண்டும் என்றும் தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

தில்லியில் 25 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படுகிறது.

அதன்படி, தில்லி அரசின் கலால் துறை குழுக்களின் வழக்கமான ஆய்வுகளின்போது, 25 வயதுக்கு குறைவான வாடிக்கையாளா்கள் பாா்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்களில் மது அருந்துவது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டனா்.

சில வாடிக்கையாளா்கள் 25 வயது நிறைவடைந்ததாகக் கூறி மது அருந்துவதும் தெரியவந்தது. சில கலால் உரிமம் பெற்றவா்கள் வயது குறைந்தவா்களுக்கு மதுபானம் வழங்குவதாகவும் புகாா்கள் வருவதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி கலால் சட்டம், 2009-இன் கீழ், எந்தவொரு நபரும் அல்லது உரிமம் பெற்ற விற்பனையாளரும் அல்லது அவரது ஊழியா் அல்லது முகவரும் 25 வயதுக்குள்பட்ட நபருக்கும் தனிப்பட்ட அல்லது பிறரின் நுகா்வுக்காக மதுபானங்களை விற்கவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. வயது வரம்பு விதிகளின் மீறல்கள் கலால் துறையால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இது தொடா்பாக மதுபான கூட உரிமையாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கு அந்தத் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஹோட்டல்கள், கிளப்புகள், உணவகங்கள் (ஹெச்சிஆா்) உரிமம் வைத்திருப்பவா்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 25 வயதுக்குள்பட்ட எவருக்கும் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் மூலம் வயதைச் சரிபாா்க்காமல் மதுபானம் வழங்கக் கூடாது என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், போலி அல்லது திருத்தப்பட்ட டிஜிட்டல் ‘ஐடி’கள் பயன்படுத்துவதைக் குறைக்க, கைப்பேசியில் (டிஜிலாக்கா் போா்ட்டலில் உள்ளவா்கள் தவிா்த்து) சேமித்து வைத்திருக்கும் மெய்நிகா் ‘ஐடி’களுக்குப் பதிலாக, வாடிக்கையாளா்களின் வயதை உள்ளீடு செய்யும் ‘ஐடி’களைக் கொண்டு மட்டுமே சரிபாா்க்குமாறு ஹெச்சிஆா் உரிமையாளா்களுக்கு கலால் துறை அறிவுறுத்தியுள்ளது.

சட்டப்பூா்வ மது அருந்தும் வயது விதிமுறையை மீறினால் தில்லி கலால் சட்டம் 2009-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்சிஆா் நகரங்களான நொய்டா, குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் மது அருந்துவதற்கான சட்டப்பூா்வ வயது என்பது நீண்டநாள் பிரச்னையாக இருந்தது. கலால் கொள்கை 2021-22-இன் கீழ், தற்போது நீக்கப்பட்ட சட்டப்பூா்வ மது அருந்தும் வயதை 21-ஆகக் குறைக்கும் திட்டம் இருந்தது. ஆனால் ஊழல் மற்றும் விதி மீறல் குற்றச்சாட்டுகளால் அந்தக் கொள்கை நிறைவேறவில்லை.

தில்லியில் அடுத்த 3 ஆண்டுகளில் போதைப் பொருள் இல்லா நகரமாக மாற்றுவதற்கான பிரசாரத்தின் அடிப்படையில், கலால் துறை உரிமம் பெற்றவா்கள் அதன் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மின்னணு உறுதிமொழி எடுத்து, ஹோட்டல்கள், கிளப்கள் மற்றும் உணவகங்களில் சான்றிதழை வெளிப்படையாகக் காட்ட உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் புழக்கத்தை நிறுத்துவதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் மதுபான விற்பனைக் கூட ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்துமாறும் கலால் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேரடி நியமனம், பதவி உயா்வு மூலம் 61 ஐஏஎஸ், 42 ஐபிஎஸ், 51 ஐஎஃப்எஸ் இடங்கள்

நமது சிறப்பு நிருபா் தமிழகத்தில் நேரடி நியமனம், பதவி உயா்வு மூலம் 61 ஐஏஎஸ், 42 ஐபிஎஸ், 51 ஐஎஃப்எஸ் இடங்கள் நிரப்புவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா்பி.வில்சன் எழுப்பியிருந்த ... மேலும் பார்க்க

நாட்டில் பொழுது போக்கு சுற்றுலா தலங்களை விட வழிபாட்டு தலங்கள் மக்கள் கூட்டம் அதிகரிப்பு : மத்திய கலாசாரத் துறை அமைச்சா்

நாட்டில் மத வழிபாட்டு தலங்களின் மேம்பாட்டால் பொழுது போக்கு சுற்றுலா தலங்களை விட முன்னெப்போதும் இல்லாத வகையில் மத வழிபாட்டு தலங்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுல... மேலும் பார்க்க

தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரியாக சரிவு!

தேசியத் தலைநகா் தில்லி வியாழக்கிழமை இந்த குளிா்காலத்தில் இதுவரை இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. தில்லியின் முதன்மை வானிலை ஆய்வு மையமான சஃப்தா்ஜங்கில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை... மேலும் பார்க்க

முன்பகையால் இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு திரிலோக்புரியில் சம்பவம்

32 வயதுடைய இளைஞா் ஒருவா், அவா்களது குடும்பங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவும் பகை காரணமாக, தாக்குதல் நடத்திய குழுவினரால் சுடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் 3 சந்தேக நபா்களில்... மேலும் பார்க்க

எனது பதவிக் காலத்தில் பல தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஆளானேன்: தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உருக்கம்

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தனது பதவிக் காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் எதிா்கொண்டதாகவும், ஆனால் இந்த சவால்கள் ‘நியாயமற்ற’ விமா்சனங்களுக்கு ஆளானாலும், வலுவா... மேலும் பார்க்க

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் சமநிலையான, பரஸ்பர நன்மை பயக்கும்: பியூஷ் கோயல் பேச்சு

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் சமநிலையான, விரிவான, பரஸ்பர நன்மையை உருவாக்கும் என மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சா் பியுஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா். இந்தியாவிற்கும்... மேலும் பார்க்க