செய்திகள் :

வயநாடு.. ராகுலின் வெற்றிச் சாதனையை முறியடிப்பாரா பிரியங்கா?

post image

வயநாடு தொகுதியில் வெற்றி பெறும் பிரியங்கா ராகுலை தோற்கடிப்பாரா?

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்பது மட்டுமே இன்னமும் எதிர்பார்க்கப்படும் விஷயமாக உள்ளது.

பிரியங்கா காந்தி சில ஆண்டு காலமாக அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், முதல் முறையாக வயநாடு மக்களவைத் தொகுதியில்தான் தீவிர அரசியல் எனப்படும் தேர்தலில் களம்கண்டுள்ளார்.

முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா, வரலாற்றுச் சாதனையாக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தனது வெற்றியைப் பதிவு செய்யவிருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 6.47 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அது மட்டுமல்லாமல் 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தனது வெற்றியை வயநாடு தொகுதியில் பதிவு செய்திருந்தார்.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் வயநாடு தொகுதியில் வென்றிருக்கும் பிரியங்கா காந்தி, மற்ற வேட்பாளர்களை தோற்கடித்துவிட்டது உறுதியான நிலையில், இதற்கு முன்பு மகத்தான வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரியங்கா காந்தி 6.17 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வாக்குகளில் இன்னமும் ராகுலை முந்தவில்லை என்றாலும்கூட, வாக்கு வித்தியாசத்தில், ஏற்கனவே ராகுலின் வெற்றி வித்தியாசத்தை முறியடித்துவிட்டார். தற்போது இந்திய கம்யூ. வேட்பாளர் சத்யன் மொகேரியை விட, பிரியங்கா 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 9.52 லட்சம் வாக்குகளில், பிரியங்கா காந்தி ஏற்கனவே 6 லட்சம் வாக்குகளைப் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயநாடு தொகுதியில் பிரியங்கா வெற்றி

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றுள்ளார். மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன் தும்காவில் வெற்றி

ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன் தும்கா பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் நவம்பர் 13ம் தேத... மேலும் பார்க்க

மணிப்பூரில் மேலும் 2 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு மொபைல் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், கக்சிங், பிஷ்ணுபூர், தௌபால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ... மேலும் பார்க்க

என் மீது வைத்த நம்பிக்கையை உறுதிசெய்வேன்: பிரியங்கா காந்தி

புது தில்லி: நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி, உங்கள் நம்பிக்கையில் நான் மூழ்கிவிட்டேன் என்று வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்... மேலும் பார்க்க

வயநாடு தொகுதி வாக்கு எண்ணிக்கை: என்ன செய்துகொண்டிருந்தார் பிரியங்கா?

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி என்ன செய்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாக... மேலும் பார்க்க

முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!

மஹாயுதி கூட்டணியில் முதல்வர் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை என பஜக தலைவர் தேவெந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று ... மேலும் பார்க்க