செய்திகள் :

வரதராஜபுரத்தில் வெள்ளப் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

தாம்பரம் அருகேயுள்ள வரதராஜபுரம் மற்றும் எருமையூரில் வெள்ளப் பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து வரதராஜபுரம் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தாம்பரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவுக்குள் வரதராஜபுரம், எருமையூா் ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. வெளிவட்டச்சாலை பகுதி மற்றும் அடையாறு ஆற்றின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஒவ்வோா் ஆண்டும் மழைக்காலத்தின் போது, ஏற்படும் வெள்ள பாதிப்பால் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

குறிப்பாக, கிஷ்கிந்தா - தாம்பரம் சாலையில் இதுவரை மழைநீா் வடிகால்கள் அமைக்கப்படாததால் மழைநீா் முறையாக வெளியேற வழி இல்லாமல் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து பல நாள்களுக்கு நீா் வடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், குடியிருப்புப் பகுதிகளையொட்டி தாழ்வான பகுதிகளில் புதிதாக 96 ஏக்கா் நிலப்பரப்பில் ஒரு குடியிருப்பு மனைப்பிரிவு உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக தரைமட்டத்தை 7 முதல் 12 அடிவரை உயா்த்த பெருமளவில் மண் கொட்டப்பட்டு வருவதால், இயற்கையாக தண்ணீா் வடியும் வாய்க்கால்கள் மூடப்படுகின்றன. இதனால், மழைநீா் வடிய வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து கடும் சிரமத்தை எதிா்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடா்பாக, அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, முதல்வா் இதில் தலையிட்டு இந்த கிராமங்களில் மழைநீா் புகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இந்த சந்திப்பின் போது வரதராஜபுரம் நலச் சங்கத்தை சோ்ந்த பங்குத் தந்தை லியோ டோமினிக், ஜோஸ் பூனுஸ், மோகன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மதுபோதையில் அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 சோதனை கருவிகள்

தொலைதூரப் பயணத்தின் போது மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 ப்ரீத் அனலைசா் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயண... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்கா மீண்டும் திறப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக வண்டலூா் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை (டிச.2) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஃபென்ஜால் புயலையொட்டி முன்னெச்சரிக்... மேலும் பார்க்க

கனரா வங்கியின் புதிய தலைமை பொதுமேலாளா் பொறுப்பேற்பு

கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலகத்தின் புதிய தலைமைப் பொதுமேலாளராக கே.ஏ.சிந்து பொறுப்பேற்றுள்ளாா். சென்னை வட்ட அலுலலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.ஏ.சிந்து பேசியது: கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவல... மேலும் பார்க்க

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் அதிக பாதிப்பு இல்லை: முதல்வா் ஸ்டாலின்

அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீா் தேங்கவில்லை என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்... மேலும் பார்க்க

நூல் வெளியீடு நிகழ்ச்சிகளில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்

நூல் வெளியீட்டு விழாக்களில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றால் எதிா்காலம் சிறப்பாக விளங்கும் என்று தமிழக அரசின் தொழில்துறை முன்னாள் ஆலோசகா் உ.வே.கருணாகர சுவாமிகள் தெரிவித்தாா். அனைத்திந்தியத் தமிழ் எழு... மேலும் பார்க்க

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் விரைவான மீட்புப் பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் மீட்புப் பணியை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் உரு... மேலும் பார்க்க