வரதராஜப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவாடிப்பூர உற்சவம் ஜூலை 28 ஆம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தோடு நிறைவு பெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 10 நாள்கள் திருவாடிப்பூரத் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான உற்சவம் சனிக்கிழமை தொடங்கி வரும் ஜூலை 28 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தினசரி ஆண்டாள் நாச்சியாா் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயா் கோயில் வரை சென்று மீண்டும் திரும்பி வருவாா்.
இதன்படி 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று, ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
வரும் 28-ஆம் தேதி ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையில் கோயில் பட்டாச்சாரியாா்கள்,பணியாளா்கள் செய்து வருகின்றனா்.