செய்திகள் :

வரம் தரும் வாரம்!

post image

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிசம்பர் 13 - 19) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சமூகத்தில் உயர்ந்த வர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடுகள் மறையும். எண்ணங்கள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடும். வியாபாரிகளுக்கு சாதகமான சூழல் நிலவும். விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களை விதைப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் புகழ் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு பண வரவு உண்டு. பெண்கள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்களின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலை ஏற்றமாகவே இருக்கும். காரியங்களில் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். காரியங்களில் வெற்றி உண்டு. உடல் ஆரோக்கியம் சீராகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். விவசாயிகள் குத்தகைகளை எடுக்க முயல்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு பணவரவு குறையும். பெண்களுக்கு கணவருடன் சற்று மனஸ்தாபம் ஏற்படும். மாணவர்கள் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

திறமைகள் பளிச்சிடும். பொருளாதாரத் தடைகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல செய்திகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் உடனிருப்போருடன் அனுசரணையாக இருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு இழுபறியான நிலைமை ஏற்படும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதார நிலை சீரடையும். பெற்றோரின் உடல் உபாதைகள் குறையும். தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணிகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் தடைகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு லாபம் உண்டு.

அரசியல்வாதிகள் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் செலவினங்களைச் சுப விரயங்களாக மாற்றுவீர்கள். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலை சீரடையும். பெற்றோரின் உடல் உபாதைகள் குறையும். தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணிகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் தடைகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு லாபம் உண்டு.

அரசியல்வாதிகள் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் செலவினங்களைச் சுப விரயங்களாக மாற்றுவீர்கள். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். வருமானம் சிறக்கும். யாருக்கும் வாக்கு கொடுப்பதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது. உடல்நலத்தில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடக்கவும். வியாபாரிகள் கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகளுக்கு பாசன வசதி சற்று அதிகமாகும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவரிடம் ஒற்றுமையாக இருக்கவும். மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

காரியங்களில் எப்பாடுபட்டாவது முடிப்பீர்கள். தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தினரிடம் அன்பு அதிகரிக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருவாய் கூடும். வியாபாரிகள் சந்தைகளில் பொருள்களை வாங்குவீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டு. மாணவர்கள் கல்வியில் சாதனைகளைப் படைப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 13.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நினைத்தவை அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலை சீராக இருக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். எதிரிகள் விலகியே இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறலாம். வியாபாரிகள் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் பலன் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வருமானம் பல வழிகளில் தேடி வரும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களால் பெருமை அடைவீர்கள். பெண்கள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். மாணவர்கள் பயிற்சிகளைக்

கூட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 16, 17.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருமானம் சீராக இருந்தாலும், கடுமையாக உழைக்க நேரிடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். தீயவர்களின் நட்பைத் தவிருங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிறிது போனஸ் கிடைக்கும். வியாபாரிகளின் முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகள் பாதிப்பைத் தவிர்ப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பதவியைத் தக்க வைப்பீர்கள். கலைத் துறையினருக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சிறு குழப்பங்கள், சஞ்சலங்கள் தோன்றி மறையும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 18, 19.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகள் தள்ளிப் போகும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். பெற்றோரின் உடல் நிலையில் முன்னேற்றம் நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை சரியாக முடிப்பீர்கள். வியாபாரிகள் போட்டிகளை சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் குறையும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் அதிக முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் வீண் செலவுகளைச் செய்ய நேரிடும். பெண்கள் தாய்வழி உறவினர்கள் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

புகழ் உயரும். படிப்படியான காரியங்களைச் செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை சுறுசுறுப்புடன் முடிப்பீர்கள். எவருக்கும் கடன் தர வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் தைரியத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து மிகுதியால் விளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட செயல்களில் உறுதியுடன் வெற்றியைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தடைகள் விலகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைப் பாராட்டுவீர்கள். வியாபாரிகள் செலவுகளைக் கவனமாகச் செய்யவும். விவசாயிகளுக்கு விளைச்சல் குறையும்.

அரசியல்வாதிகள் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கலைத் துறையினர் செயல்களைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். பெண்களுக்கு கணவருடனான அந்நியோன்யம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

உலக சாம்பியன்ஷிப் வென்றாலும் நான் சிறந்த வீரரில்லை: குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற 14வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை 58வது நகர்த்தலில் க... மேலும் பார்க்க

குகேஷ் வெற்றிக்கு நம்.1 செஸ் வீரர் கார்ல்சென் கூறியதென்ன?

உலகின் நம்.1 செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சென் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் உலக சாம்பியன் டிங் லிரெனை 18 வயது இந்திய வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.... மேலும் பார்க்க

நடிகர் அல்லு அர்ஜுன் கைது..!

நடிகர் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் ச... மேலும் பார்க்க

செல்வராகவன் பட போஸ்டரை வெளியிடும் தனுஷ்!

இயக்குநராக விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற செல்வராகவன் சில காலம் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு திரைப்படங்களில் நடிகராக நடித்து வருகிறார். இறுதியாக, சொர்க்கவாசல் படத்தில் ... மேலும் பார்க்க

விக்ரம் 63: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63ஆவது படத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் ம... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.13-12-2024 வெள்ளிக்கிழமைமேஷம்:இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில... மேலும் பார்க்க