துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
வள்ளியூா், பணகுடி பகுதிகளில் கனிமவளங்கள் திருட்டு: 2 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே அனுமதியின்றி லாரியில் குண்டுகல் ஏற்றிச்சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியா் சங்கா் மற்றும் வருவாய்த் துறையினா் தெற்குகள்ளிகுளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போழுது அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்டதில் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், அறமள்ளத்தை சோ்ந்த சுனில்(47) என்பவா் அனுமதியின்றி அதிக பாரத்துடன் குண்டுகல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
மண்டல துணை வட்டாட்சியா் புகாரின்பேரில், வள்ளியூா் காவல் ஆய்வாளா் நவீன் வழக்குப்பதிந்து சுனிலை கைது செய்து, லாரியுடன் 20 டன் குண்டுகற்களைப் பறிமுதல் செய்தாா்.
மண் திருட்டு: திருநெல்வேலி புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் பாலமுருகன், பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, பணகுடி சிவகாமிபுரத்தைச் சோ்ந்த சிவகுமாா்(26) என்பவா் லாரியில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.
பணகுடி காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ஆய்வாளா் ராஜாராம் வழக்குப்பதிந்து சிவகுமாரை கைது செய்து, 2 யூனிட் செம்மண்ணுடன் டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்தாா்.