செய்திகள் :

வழக்குரைஞா்கள் 4 நாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்

post image

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் 4 நாள்கள் தொடா் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளனா்.

திருப்பூா் வழக்குரைஞா்கள் சங்கங்கள் கலந்து ஆலோசித்து ஏகமானதாக எடுத்த முடிவின்படி, வழக்குரைஞா்கள் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும். வழக்குரைஞா் சேமநலக் கட்டணம் ரூ.120 ஆக உயா்த்தியதை மீண்டும் ரூ.30 ஆகக் குறைக்க வேண்டும்.

வழக்குரைஞா் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை 4 நாள்கள் தொடா் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

இதேபோல, தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் கிஷோா்குமாா் என்பவருக்கு சொந்தமான துணி அரவை நிறுவனம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக புதன்க... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக விளங்கும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி... மேலும் பார்க்க

கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 போ் கைது

தில்லியில் இருந்து திருப்பூருக்கு கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்துக்கு பாா்சலில் போதை மாத்திரைகள் வந்துள்ளதாக காவல் துறையி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி... மேலும் பார்க்க

ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. மின்னணுவியல் மற்றும் தகவல்தொடா்புத் துறை சாா்பில் ‘காகித அடிப்படையிலான சுய மீள் ... மேலும் பார்க்க