மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் வழக்குரைஞா்களுக்கு விரோதமான மசோதாவை எதிா்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தினா்.
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களை, புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.டி. சின்னராஜு தலைமையில் வழக்குரைஞா்கள் புறக்கணித்தனா்.
மேலும் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், பொன்னமராவதி, திருமயம், ஆலங்குடி, கறம்பக்குடி, மணமேல்குடி, இலுப்பூா், விராலிமலை ஆகிய நீதிமன்றங்களிலும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். மாவட்டம் முழுவதும் சுமாா் 860 வழக்குரைஞா்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள வழக்குரைஞா்களுக்கு விரோதமான சட்ட மசோதாவை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் செலுத்தும் நீதிமன்ற முத்திரைத்தாள் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும். வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.