செய்திகள் :

வா வத்தியார்: ``ஒரு மோட்டிவேஷ்னல் வீடியோ; இந்தப் படம் பண்ண அதுதான் காரணம்" - நடிகர் கார்த்தி

post image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வா வாத்தியார் பட நிகழ்ச்சி
வா வாத்தியார் பட நிகழ்ச்சி

இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் கார்த்தி, ``தர்மத்தின் வாழ்வுதனை 'சூது கவ்வும்'னு ஒரு படம் பண்ணிட்டு கிட்டத்தட்ட 10 வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் தர்மமே வெல்லும்னு ஒரு படம் இயக்கியிருக்கிறார், இயக்குநர் நலன். எல்லாருக்கும் ஒவ்வொரு இயக்குநரைப் பிடிக்கும்.

நிறைய இயக்குநருக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவர் நலன் குமாரசாமி. எல்லாவற்றுக்கும் அவரிடம் ஒரு தத்துவம் இருக்கும். சூது கவ்வும் படத்தில் 'இந்த வேலையை செய்றதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும்'-னு ஒரு வசனம் வச்சிருப்பார். அப்படி நலன் சொல்லுற ஒரு ஐடியாவ புரிஞ்சிக்க ஒரு குருட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேணும். அவர் ஐடியாவ புரிஞ்சுக்க கொஞ்ச நேரம் ஆகும். அந்த ஐடியாவ புரிஞ்சுகிட்டாலும் நம்ம அதை கற்பனைப் பண்ணவே முடியாது.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி

ஆயிரத்தில் ஒருவன் படத்துல ஒரு சீன் எழுதியிருந்தாலும் அதை புரிஞ்சிக்க செல்வராகவன் சார் எக்ஸ்பிளைன் பண்ணா மட்டுமே புரியும். அப்படித்தான் நலன் கூட வேலை செய்ததும் அமைஞ்சது. ஏதாவது ஜாலியான கதை சொல்லுவாருன்னு பார்த்தா, அவர் வா வாத்தியார் கதைய கொண்டு வந்து கொடுத்துட்டாரு. இந்த கேரக்டர் நம்மால செய்ய முடியுமா... நமக்கு இது வருமானு நைட்லாம் எனக்கு தூக்கமே வரல. அப்போ ஒரு மோட்டிவேஷனல் வீடியோ பார்த்தேன்.

'எந்த விஷயம் உங்கள ரொம்ப பயமுறுத்துதோ, எதை பார்த்து ரொம்ப பயப்படுறோமோ அதை நாம எதிர்க்கொண்டே ஆகனும். அங்கதான் நமக்கான வளர்ச்சி இருக்கும்'-னு சொன்னாங்க. இது நமக்கு கிடைத்த ஒரே ஒரு வாழ்க்கை. எல்லாத்துக்கும் பயந்துட்டே இருக்க முடியாது.

நாம எத்தனை முறை ஜெயிச்சாலும், தோற்றதை மட்டுமே பேசுற உலகம் இது. அதனால இறங்கி அடிச்சரணும்னு முடிவு பண்ணி, நலன் இருக்கிற தைரியத்துல இந்தப் படம் நடித்து முடிச்சேன். இந்த படம் கத்தி மேல நடக்கற மாதிரி. இது ஒரு 80's 90's தமிழ் சினிமாவுக்கென ஒரு அடையாளம் இருக்கு. அதுக்கு ஒரு ட்ரிபூயூட்டா இந்தப் படம் இருக்கும்." எனப் பேசினார்.

வா வாத்தியார்: ``ஷூட்டிங் செட்ல அசந்து தூங்கிட்டேன்... அப்போ" - கீர்த்தி ஷெட்டி

நடிகர் கார்த்தி 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்... மேலும் பார்க்க

வா வத்தியார்: ``MGR சென்ட்ரல்; 5,000 முறை அவர் பெயர் சொல்லப்படுது"- நெகிழ்ந்த நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குந... மேலும் பார்க்க

Pragathi: "அதுல நீதான் நடிக்கணும்'னு பாலா சார் சொன்னாரு!" - பின்னணி பாடகி பிரகதி ஷேரிங்ஸ்

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நினைவிருக்கிறதா!? அந்த சீசனை அத்தனை எளிதாக மறக்க முடியாது. ஆஜித், பிரகதி எனத் திறமையாள பாடகர்கள் பலரும் பங்கேற்ற சீசன் அது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு வெகு ச... மேலும் பார்க்க

Padaiyappa: ரஜினி சொன்ன டைட்டில்; மறுத்த ஐஸ்வர்யா ராய்; 'படையப்பா' 2 ஐடியா - நினைவுகள் பகிரும் ரஜினி

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு 'படையப்பா' படம் ரீ-ரிலீஸ் ஆகவிருக்கிறது. 1999-ல் வெளியான இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி திரைப்படம் குறித்தான பல்வேறு ச... மேலும் பார்க்க

Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்

அடுத்தடுத்த அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார் சூர்யா. 'ஆவேசம்' ஜித்து மாதவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சூர்யா47' படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்திருக்கிறது. அன்றே படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறத... மேலும் பார்க்க