எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கலாம்: சென்னை உ...
வாகனங்களுக்கு போலீஸாா் கெடுபிடி
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது, வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகம், அண்ணா நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக காா், பைக்கில் செல்வதற்கு போலீஸாா் தடை விதித்து கெடுபிடி காட்டினா்.
திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அப்போது, கோயிலின் பல்வேறு இடங்களில் பணியில் ஈடுபடுவதற்காக கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், துணை வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு பே கோபுரம் அருகேயுள்ள விஐபிக்களுக்கான நுழைவு வாயில் வழியே செல்ல முயன்றனா்.
அவா்களை போலீஸாா் அனுமதிக்கவில்லை. மேலும், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியரின் காரையும் போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதில், வருவாய்த்துறையினருக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல, வேலூா் சாலையில் உள்ள தீபம் நகா், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பரணி தீப அனுமதி அட்டைகளுடன் பைக்கில் வந்த பக்தா்களை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகம், அண்ணா நுழைவு வாயில் ஆகிய பகுதிகளில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
மேலும், கடந்த 3 நாள்களாக பெரியாா் சிலை, மாட வீதிகளில் பைக்குகள் செல்ல போலீஸாா் அனுமதிக்காததால் உள்ளூா் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.